தமிழ் சினிமாவில் அடுத்த 'மினி ஆச்சி' ரெடி - கமல் அறிமுகப்படுத்திய சுஜாதாவுக்கு விருது
சிறந்த குணச்சித்திர நடிகையான 'பருத்திவீரன்' சுஜாதாவுக்கு 'மினி ஆச்சி' என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. விருமாண்டி படத்தின் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமான சுஜாதா அதன்பிறகு வந்த பருத்திவீரன் படத்தின் மூலம் பரவலான அடையாளத்தைப் பெற்று, 'பருத்தி வீரன்' சுஜாதா என்று அழைக்கப்படும் அளவிற்குப் புகழ் பெற்றார். ஏறக்குறைய அனைத்து கதாநாயகர்களின் படங்களிலும் நடித்து 90-வது படத்தை கடந்த சுஜாதா 100 ஆவது படத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். இவருக்கு அண்மையில் தனியார் அமைப்பு கோல்டன் கார்பெட் அவார்டு என்ற விருதை அளித்தது. அதே விழாவில் சுஜாதாவுக்கு 'மினி ஆச்சி 'என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
Next Story