தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சந்தானத்தின் பிறந்தநாள் இன்று....

x

நகைச்சுவை வேடத்தில் உச்சத்தை தொட்டு, இன்று கதாநாயகனாக தமிழ்நாட்டின் பல மனங்களை கவர்ந்துக்கொண்டிருப்பவர்தான் சந்தானம்...

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து இளசுகளின் மனதை கவர்ந்தார் சந்தானம்..

உச்ச நடிகர் படமாக இருந்தாலும் சரி, மெகாஹிட் படமாக இருந்தாலும் சரி, பாகுபாடு இல்லாமல் கலாய்த்தது லொள்ளு சபா.. அதில் தனித்துவம் பெற்றது சந்தானத்தின் பஞ்ச்..

இதை பார்த்த சிலம்பரசன், சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்த, அதில் தொடங்கியது சந்தானத்தின் வெற்றி பயணம்...

கவுண்டமணியின் டிராக்கை கையில் எடுத்த சந்தானம், கலாயை தனது டிரேட்மார்க்காக வைத்து தமிழ் சினிமாவில் அசுர வேகத்தில் வளர்ந்தார்..

அறிமுகமான சில ஆண்டுகளிலேயே ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் என உச்ச நட்சத்திரங்களின் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்...

யாராக இருந்தாலும் பங்கமாக கலாய்ப்பார் என்ற வார்த்தைகளில் அடங்கியிருந்தது சந்தானத்தின் ஆரம்ப கால சினிமா...

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்த சந்தானம் அனைத்து இளைஞர்களுக்கு FAVOURITE ஆனார்..

பல படங்களில் கதாநாயகனுக்கு நண்பனாக நடித்து நகைச்சுவையில் கலக்கிய சந்தானம், பல படங்கள் ஹிட் அடிக்க முக்கிய காரணகர்த்தாவாகவும் இருந்தார்...

காமெடி டிராக் நன்றாக போய் கொண்டிருக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார் சந்தானம்

அடுத்து தில்லுக்கு துட்டு படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது..

எனினும் காமெடியன் சந்தானத்தை விரும்பிய அளவிற்கு, ஹீரோ சந்தானத்தை ஏற்பதில் தயக்கம் காட்டியது தமிழ் சினிமா..

ஆனால் தளராத சந்தானம் அடுத்தடுத்து ஹீரோவாக நடித்து, கதாநாயகனாகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்..

நகைச்சுவை நடிகனாக தடம் பதித்து, இன்று கதாநாயகனாக ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் சந்தானம் பிறந்த தினம்... 21 ஜனவரி 1980....


Next Story

மேலும் செய்திகள்