ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா பாடல் வெளியாகி இணையத்தைக் கலக்கி வரும் நிலையில், படத்தின் நாயகி தமன்னா, அப்பாடலுக்கு அசத்தல் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். காவாலா பாடலின் லிரிக்கல் வீடியோவில் தமன்னாவின் துள்ளல் நடனத்தையும், நடிகர் ரஜினிகாந்தின் ஸ்டலையும் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். இணையத்தில் இப்பாடல் தீயாய்ப் பரவி வரும் நிலையில், படத்தின் நாயகி தமன்னா, "காவாலா" பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்...