"நடவடிக்கை எடுங்க அண்ணாமலை".. 'டாக்டர்' பட வில்லன் நடிகர் கடும் வேதனை - கராத்தே கார்த்திக்கே வந்த சோதனை

x

சென்னையில் சட்ட விரோதமாக கழிவு நீர் இணைப்பை பயன்படுத்தி வந்த பாஜக நிர்வாகி மீது, அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வில்லன் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்கிற கராத்தே கார்த்தி, திரைப்பட நடிகராக உள்ளார். சிங்கம் 3, என்னை அறிந்தால், பிகில், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், டாக்டர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்நிலையில், தனது வீட்டின் அருகே வசித்து வந்த வெங்கடேசன் என்பவர், சட்டவிரோதமாக 4 கழிவுநீர் இணைப்புகளை பயன்படுத்தி வந்ததாக, கார்த்தி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன் பேரில், அந்த இணைப்பை அதிகாரிகள் துண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும், சம்மந்தப்பட்ட நபர் பாஜகவில் இருப்பதாகவும், அதிகாரத்தில் இருப்பதால் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் கூறிய கார்த்தி, பாஜக தலைவர் அண்ணாமலை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்