பாகிஸ்தானுக்கு எதிராக மாஸ் காட்டிய இந்தியா...கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்

x

பாகிஸ்தானுக்கு எதிராக மாஸ் காட்டிய இந்தியா...கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்திற்கு வெளியே இந்திய ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பியும், நடனமாடியும் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திய நிலையில், இந்தியாவின் வெற்றியை ஜம்முவில் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

மேற்குவங்கத்தின் சிலிகுரி நகரில் இந்தியாவின் வெற்றியை மேளதாளங்கள் முழங்க ரசிகர்கள் நடனமாடிக் கொண்டாடினர்.

பெங்களூருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் இந்தியாவின் வெற்றியை அங்குமிங்கும் ஓடியாடிக் கொண்டாடி மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்