டி20 உலகக்கோப்பை சூப்பர்-12 சுற்று - ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நெதர்லாந்து

x

டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் ஜிம்பாப்வேவை 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து வீழ்த்தியது.

அடிலெய்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா மட்டும் அதிரடியாக ஆடினார். எனினும், 40 ரன்களில் சிக்கந்தர் ராசா ஆட்டமிழந்த நிலையில், 19 புள்ளி 2 ஓவரில் 117 ரன்னுக்கு ஜிம்பாப்வே ஆல்-அவுட் ஆனது. பின்னர் 118 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய நெதர்லாந்தில் தொடக்க வீரர் மேக்ஸ் ஓட்வெட் அரைசதம் அடித்தார். அவருடன் இணைந்து ஆடிய டாம் கூப்பர் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து நெதர்லாந்து இலக்கை எட்டியது. மேக்ஸ் ஓட்வெட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்