டி20 உலகக்கோப்பை சூப்பர்-12 சுற்று - வெளியேறியது ஆப்கானிஸ்தான்

x

டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை தோற்கடித்தது.

பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் ஜெயித்த ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 145 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை 18.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து இலக்கை எட்டியது.

அந்த அணி வீரர் தனஞ்ஜெயா டி சில்வா 66 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார். இந்த வெற்றியால் அரையிறுதி வாய்ப்பை இலங்கை தக்க வைத்துள்ளது.

தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் அரையிறுதி வாய்ப்பில் இருந்து வெளியேறி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்