டி20 உலகக்கோப்பை - 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா..!

x

டி20 உலகக்கோப்பை - 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா..!


டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றின் கடைசிப் போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை இந்தியா தோற்கடித்தது.


மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து ஆட்டமிழ்ந்தார். நேர்த்தியாக ஆடிய விராட் கோலி 26 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், வழக்கம்போல் வாண வேடிக்கை நிகழ்த்தினார். அதே சமயம், மறுமுனையில் ரிஷப் பண்டும், ஹர்திக் பாண்டியாவும் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். எனினும் கடைசி ஓவர்களில் பவுண்டரிகளைப் பறக்கவிட்ட சூர்யகுமார் யாதவ், 25 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்தியா 186 ரன்கள் குவித்தது. பின்னர் பேட்டிங் செய்த ஜிம்பாப்வேவிற்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. புவனேஸ்வர் குமார் வீசிய முதல் பந்தில் தொடக்க வீரர் மாதெவர் கேட்ச் ஆனார். பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே, 18வது ஓவரில் 115 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றியால் 8 புள்ளிகளுடன் குரூப்-டூ பிரிவில் முதலிடத்தைப் பிடித்த இந்தியா, வருகிற 10ம் தேதி இங்கிலாந்துடன் அரையிறுதியில் மோதவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்