டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய யு.ஏ.இ. வீரர் கார்த்திக்

டி20 உலகக்கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்காக ஆடி வரும் சென்னையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்து உள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் சுற்றுப் போட்டியில் 15வது ஓவரை வீசிய கார்த்திக் மெய்யப்பன், பனுகா ராஜபக்சே, அசலன்கா, இலங்கை கேப்டன் ஷனகா ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை 22 வயதே ஆன கார்த்திக் மெய்யப்பன் பெற்று உள்ளார். மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரக அணிக்காக டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் நபர் என்ற சாதனையையும் கார்த்திக் மெய்யப்பன் படைத்து உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com