இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபாரம் -சிக்சர் மழை பொழிந்த ஸ்டோய்னிஸ்..

x

டி20 உலகக்கோப்பை சூப்பர்-12 சுற்றில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.

பெர்த் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை, 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிஷாங்கா 40 ரன்களும், அசலன்கா 38 ரன்களும் அடித்தனர்.

பின்னர் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் பிற்பாதியில் அதிரடி காட்டியது.

குறிப்பாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஸ்டோய்னிஸ் சிக்சர் மழை பொழிந்தார்.

6 சிக்சர்களைப் பறக்கவிட்ட ஸ்டோய்னிஸ், வெறும் 17 பந்தில் அரைசதம் அடித்து அதகளப்படுத்தினார். இதனால் 17வது ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்த நிலையில், ஆஸ்திரேலியா இலக்கை எட்டியது.


Next Story

மேலும் செய்திகள்