டி 20 வேர்ல்டு கப்: பாக்.கிற்கு வந்த சோதனை கடைசி பந்தில் அதிர்ச்சி கொடுத்த ஜிம்பாப்வே

x

டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், 1 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஜிம்பாப்வே த்ரில் வெற்றி பெற்றது.


பெர்த்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான், ஜிம்பாப்வே பவுலர்களின் நேர்த்தியான பந்துவீச்சால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. 14வது ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தி சிக்கந்தர் ராசா திருப்புமுனை தந்தார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கடைசி பந்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட, ஷாகீன் அஃப்ரிடி ஒரு ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். இதன்மூலம் 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே த்ரில் வெற்றி பெற்று, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது.


Next Story

மேலும் செய்திகள்