டி20 தொடர் - ரசிகர்களுக்கு பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி | BCCI | Sanju Samson

x

இந்திய வீரர் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பையில் நடந்த முதல் டி20 போட்டியில், பீல்டிங்கின்போது சஞ்சு சாம்சனுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மருத்துவக்குழு அறிவுரையின் பேரில், சஞ்சு சாம்சன் தொடரில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிசிசிஐ, அவருக்கு பதிலாக ஜித்தேஷ் சர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்