நடிகர் டி.ராஜேந்தருக்கு ரத்தக்கசிவு... இப்போது உடல்நிலை எப்படி உள்ளது?

விசா கிடைத்ததை அடுத்து, நடிகர் டி.ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.
x

விசா கிடைத்ததை அடுத்து, நடிகர் டி.ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் அண்மையில் நெஞ்சு வலி காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு வயிற்றுப்பகுதியில் ரத்தக் கசிவு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேல்சிகிச்சைக்கு அவரை அமெரிக்கா அழைத்து செல்ல ஏற்பாடுகள் நடந்தன. எனினும் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், அவர் தொடர்ந்து தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது விசா கிடைத்திருப்பதால் இன்னும் இரண்டு நாட்களில் மேல்சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்