வேகமெடுக்கும் பன்றி காய்ச்சல் - மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை | Swine flu

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வன பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காட்டு பன்றிகள் இறந்து வருகின்றன. அவற்றின் உடற்கூறுகள் ஆய்வுக்காக அனுப்பிய போது ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து வளர்ப்பு பன்றிகளை வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் கொண்டு வரவும் விற்ப்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடை பராமரிப்புத்துறை எச்சரித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com