சபாநாயகரின் உத்தரவை மீறி சிவகுமார் பெயரில் சத்தியம் செய்து பதவியேற்பு..!

x

அம்மாநிலத்தின் 16-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும் இன்று முறைப்படி எம்எல்ஏக்களாக சபாநாயகர் முன் பதவி ஏற்கும் நிகழ்வு பேரவையில் நடைபெற்றது. பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் பேசிய தற்காலிக சபாநாயகர் ஆர்.வி.தேஷ் பாண்டே, உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது அரசியலமைப்பு மற்றும் கடவுளின் மீது மட்டும் சத்தியம் செய்து பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும், தனிநபர் பெயர் எதையும் குறிப்பிடக் கூடாது என உத்தரவிட்டார். ஆனால் சன்னகிரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜு சிவகங்கா, பதவி ஏற்கும் போது கடவுள் மட்டுமல்லாது தனது மானசீக கடவுள் என டி.கே. சிவக்குமாரின் பெயரை குறிப்பிட்டு பதவி பிரமாணம் செய்து கொண்டார். இதைக் கேட்ட பாஜகவின் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பிய நிலையில், சபாநாயகர் தேஷ் பாண்டே, அவரை எதுவும் கண்டிக்காமல் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்