தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா "கலவரத்தை தூண்ட சதி செய்கிறார்"

x

கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் கைதாகி வெளியே வந்த ஸ்வப்னா சுரேஷ், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான கே.டி.ஜலீல், ஸ்வப்னா, முன்னாள் எம்எல்ஏ பி.சி. ஜார்ஜ் ஆகியோர் மீது புகார் ஒன்றை அளித்தார். அதில் பொய்யான குற்றச்சாட்டுகளால் கேரளாவில் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாக தெரிவித்துள்ள நிலையில் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்