இந்தியன் ஆயில் நிறுவனம் கொடுத்த Surprise..இல்லத்தரசிகளுக்கு வரபிரசாதமாக கேஸ் சிலிண்டர்..இருக்கும் அம்சங்கள் என்னென்ன தெரியுமா ?

x

சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில், எத்தகைய சூழ்நிலையிலும் வெடிக்கவே வெடிக்காத வகையிலான எடை குறைந்த சிலிண்டர்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், அதை பற்றிய தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

வெடி விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, எடை அதிகமுள்ள இரும்பு சிலிண்டருக்கு மாற்றாக நவீன சிறிய ரக சிலிண்டரை இந்திய ஆயில் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது. இது 5 மற்றும் 10 கிலோ எடையுள்ளது.

அதிக பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இது அதிக அடர்த்தி கொண்ட பாலிஎத்திலினால் செய்யப்பட்ட உள் உறையை கொண்டுள்ளது. மேலும் பாலிமரால் மூடப்பட்ட ஃபைபர் கிளாஸின் கலவை மூலம் பாதுகாக்கப்படுகிறது.

இது இரட்டை அடர்த்தி பாலிஎத்திலீனால் செய்யப்பட்ட வெளிப்புற ஜாக்கெட்டுடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் இந்த சிலிண்டர்களில் டார்ச்-லைட்-ஐ பயன்படுத்தி எரிவாயு அளவை கண்காணிக்க முடியும்.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் எல்.பி.ஜி பிரிவின் மாநில தலைவர் கவிதா, தந்தி டிவியிடம் பேசுகையில்,

இந்த சிலிண்டருக்கு சென்னையில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக கடந்தாண்டு 20,000 சிலிண்டர்கள் நுகர்வோர்கள் பதிவு செய்து பயன்படுத்தியுள்ளனர். இது நடப்பாண்டில் மேலும் வரவேற்பு இருக்கும்'' என்றார்..

"இதற்கு டெபாசிட் தொகை 3,500 ரூபாயாகும். ஏற்கனவே பதினான்கரை(14.5) கிலோ எடையுள்ள சிலிண்டர் வைத்து வாடிக்கையாளர்கள் அதனை கொடுத்து, இந்த எடை குறைவான சிலிண்டரை மாற்றிக் கொள்ளலாம் என்றார்.

இந்த சமையல் எரிவாயை ஏற்கனவே இருக்கக்கூடிய வால்வு மற்றும் ரெகுலேட்டர் மூலமாக பயன்படுத்த முடியும். என்றார்

வெடிக்கவே வெடிக்காத, எளிதில் கையாளக்கூடிய இந்த நவீன சிலிண்டர்கள் இல்லத்தரசிகளுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்