4 மண்டலங்களில் அறுவை சிகிச்சை தணிக்கைக் குழு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் - தந்தி டிவி எதிரொலி

x

அறுவை சிகிச்சைகளில் உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து தணிக்கை செய்ய மண்டலம் வாரியாக 4 குழுக்கள் அமைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மாணவி பிரியா மரணத்தை தொடர்ந்து அறுவை சிகிச்சைகள் பாதுகாப்பாக செய்வது குறித்த மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. இதை தொடங்கி வைத்த பின் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் 5ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்பவர்கள் உள்ளதாகவும், நாள்தோறும் 10 ஆயிரம் அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார். அறுவை சிகிச்சைகளை பாதுகாப்பாக நடத்த வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதை கையேடாக அனைத்து மருத்துவருக்கும் வழங்கப்படும் என்றார். அறுவை சிகிச்சைகள் தணிக்கை செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்ற மா.சுப்பிரமணியன், மண்டலம் வாரியாக நான்கு குழுக்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.

தந்தி டிவி விவாத நிகழ்ச்சியில் அறுவை சிகிச்சைகளை தணிக்கை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தினர். இதில் பங்கேற்று பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தணிக்கை செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி, அறுவை சிகிச்சைகளை தணிக்கை செய்ய குழு அமைப்பது தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்