வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுரேஷ் கோபி

x

தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் தவறு என்று மலையாள நடிகரும், பாஜக முன்னாள் எம்பியுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

சுரேஷ்கோபி உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. இதையடுத்து, இது குறித்து சமூக வலைதள பதிவு வெளியிட்டுள்ள அவர், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக பரவிய தகவல் தவறு எனவும், கடவுளின் கிருபையால் ஆரோக்கியமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கருடன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்த சுரேஷ் கோபி, தன்னை விசாரித்த அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்