அஜித் படத்திற்கு கூடுதல் கட்டணம் - தியேட்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

x

நடிகர் அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு படம் வெளியான போது சென்னை குன்றத்தூரில் உள்ள பரிமளம் தியேட்டரில் 100 ரூபாய் டிக்கெட்டிற்கு 525 ரூபாய் வசூலித்ததாக காசிமாயன் என்பவர் செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, டிக்கெட்டிற்கு கூடுதலாக வசூலித்த 425 ரூபாயும், வழக்கு செலவுக்கான 20 ஆயிரம் ரூபாயையும் வழங்க தியேட்டர் உரிமையாளருக்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்