சூரசம்ஹாரம் நடைபெறும் போது பிரிந்த உயிர்... தென்காசி அருகே சோக சம்பவம்

x

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் உள்ள, பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்ட நிலையில், கருப்பசாமி என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி மயங்கி விழுந்துள்ளார்.

தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கருப்பசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்