ஃபிலிம்பேரிலும் 'சூரரைப்போற்று' விருது வேட்டை!

FILMFARE விழாவிலும் சூரரைப்போற்று படம் விருது வேட்டை நடத்தியுள்ளது. சிறந்த இயக்குநர் விருதை சுதா கொங்கராவும், சிறந்த நடிகர் விருதை சூர்யாவும் வென்றனர். இவர்களை தவிர சிறந்த நடிகை விருது அபர்ணாவிற்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும், சிறந்த துணை நடிகை விருது ஊர்வசிக்கும் கிடைத்தது. காட்டு பயலே பாடலுக்காக சிறந்த பாடகி விருது தீ-க்கும், ஆகாசம் பாடலுக்காக கோவிந்த் வசந்த் - கிறிஸ்டின் ஜோஸ்க்கு சிறந்த பாடகர் விருதும் வழங்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com