"கெஜ்ரிவாலுக்கு ஆதரவு" - சரத் பவார் அறிவிப்பு | Sharad Pawar

x

பாஜகவிற்கு எதிராக உள்ள கட்சிகளை ஒன்று திரட்ட வேண்டிய நேரம் இது என, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.ராகவ் ஆகியோர் மும்பைக்கு வந்தனர். அவர்கள் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவரின் மாதேஸ்ரீ இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது டெல்லி அரசைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சிறப்புச் சட்டத்தை எதிர்த்து போராட ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.பின்னர் தேசிய வாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சரத்பவாரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய சரத்பவார், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் போது கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிக்க போவதாக தெரிவித்தார். பாஜகவிற்கு எதிராக அனைத்து கட்சியினரும் ஒன்று திரள வேண்டியது அவசியம் என்றும் சரத்பவார் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்