ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் படம்.. அதிர்ந்துபோன பெண் தேர்வர்.. கர்நாடகாவில் பரபரப்பு

x

கர்நாடகாவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட்டில் நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்த நிலையில்,

பெண் ஒருவரின் ஹால் டிக்கெட்டில், அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக நடிகை சன்னி லியோன் புகைப்படம் இருந்தது. இது குறித்து தேர்வு குழுவினர் விசாரணை நடத்திய போது, அந்த பெண் சிக்கமகளூருவை சேர்ந்தவர் என்றும், ஷிமோகாவில் தேர்வு மையம் இருந்ததால் தனது கணவரின் நண்பர் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ததும் தெரிய வந்தது. மேலும், அந்த நபர் தேர்வு எழுதும் பெண்ணின் புகைப்படத்திற்கு பதில், தவறுதலாக சன்னி லியோன் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்