ஜன.2 முதல் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

x

ஜனவரி 2ம் தேதி முதல் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் என 18 ஆலைகள் இயங்கி வருகின்றன.

அதில், பணியாற்றக் கூடிய பணியாளர்களுக்கு, இரண்டு விதமான சம்பள விகிதங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை நீக்க கோரி, நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், ஜனவரி 2ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக, தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்