யானை இறந்த பிறகும் துயரம்.. 3 சிறார்களுக்கு வனத்துறை நோட்டீஸ்

x

கோவை தடாகம் பகுதியில் இறந்த யானையின் உடலில் இருந்து தந்தம் திருடப்பட்டது தொடர்பாக, மூன்று சிறார்களுக்கு வனத்துறை சம்மன் அனுப்பியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த அந்த யானையின் உடலில் இருந்து வலது தந்தம் திருடப்பட்டது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் வனத்துறையினர், 15 வயது,12 வயது மற்றும் 11 வயதுடைய 3 சிறுவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அவர்கள் மூவரும் வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, தங்களுக்குத் தெரிந்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. 3 சிறார்களுக்கு வனத்துறை சம்மன் அனுப்பி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்