திடீரென பற்றி எரிந்த உணவகம்...பதறியடித்து ஓடிய மக்கள் - பரபரப்பு காட்சி

x

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே, உணவகத்தில் தீ விபத்து நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் அருகே முடிச்சூர் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில், நேற்றிரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. உணவகத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறிய நிலையில், விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்தில் சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்