திடீரென சாய்ந்த மின்கம்பம் - தாங்கி பிடித்த பொக்லைன் | கோரிக்கை வைத்த சென்னை மக்கள்

x

சென்னை ஆதம்பாக்கத்தில் மழைநீர் கால்வாய் அமையும் இடத்தில் பொக்லைன் இயந்திரத்தில் மின்கம்பம் கட்டி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஈக்காட்டுத்தாங்கல் அருகே மழைநீர் கால்வாய்க்கான பள்ளத்தில் விழுந்து தனியார் தொலைக்காட்சி ஊழியர் முத்துக்கிருஷ்ணன் அண்மையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநகராட்சி உத்தரவிட்டது. இந்த நிலையில், ஆதம்பாக்கம் பகுதியில் மழைநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டிய போது மின்கம்பம் சாய்ந்தது. தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் முட்டுக்கொடுத்து மின்கம்பம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், பலத்த காற்று அடித்தால் மின்கம்பம் சாய்ந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த பணிகளால் அந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்