வீட்டின் முன் நின்ற 3 பைக்குகள் - திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

x

வாலாஜாப்பேட்டை அருகே 3 இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை மாவட்டம் வெற்றிலைக்கார வீதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது.

இந்தநிலையில் இந்த குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள், திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமடைந்தன.

அப்போது மின் அளவீட்டு கருவிகளும் தீயில் கருகி சேதமடைந்த நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்