விளையாட்டில் சண்டை.. திடீர் துப்பாக்கி சூடு - பிரபல ராப் பாடகர் தலையில் பாய்ந்த குண்டு

x

அமெரிக்காவில் பிரபல இளம் ராப் இசைப்பாடகர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் பகடைக்காய் விளையாட்டின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 28 வயதான ராப் பாடகர் டேக் ஆஃப் தலையில் குண்டடி பட்டு மரணம் அடைந்தார். இந்த வன்முறையில் மேலும் படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்