விமான நிலையத்தில் திடீர் சோதனை - பறிமுதல் செய்யப்பட்ட பொம்மைகள்

x

சென்னை விமான நிலையத்தில் அமைந்துள்ள பொம்மைக் கடையில் ஐ எஸ் ஐ முத்திரை இல்லாத பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இயங்கி வரும் பொம்மைக் கடையில் ஐ எஸ் ஐ தர சான்று இல்லாத பொம்மைகள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் முத்திரை இல்லாமல் இருந்த 327 பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்