துக்க வீட்டில் திடீரென வெடித்த கலவரம்..! - சரமாரியாக பறந்த கட்டை, கற்கள்... உடைந்த மண்டைகள்..!

x

ஆரணி அருகே புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த எமநாயகம் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். இவரது இறுதிச் சடங்கில் உறவினர்கள் கலந்துகொண்டபோது, இருதரப்பினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றி கை கலப்பு ஏற்பட்டதில், இருதரப்பினரும் கட்டை மற்றும் கற்களால் தாக்கிக் கொண்டனர். இதனால் துக்க நிகழ்ச்சி, கலவரம் போல் காட்சியளித்தன. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாபு, முரளி, மணிகண்டன், பிரவீன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்