தன்பாத் விரைவு ரயிலில் திடீர் பழுது... 2,000-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் தன்பாத் விரைவு ரயிலில் AXLE BOULT துண்டானதால் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

கேரள மாநிலம் ஆழப்புழாவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் செல்லக் கூடிய விரைவு ரயில் மாலை 6.30 மணிக்கு வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது.

அப்போது ரயிலின் 6வது பெட்டியில் BREAK JOINT-ல் இருந்து AXLE BOULT துண்டானது.

உடனடியாக ஜோலார்பேட்டையில் இருந்த ரயில்வே ஊழியர்கள், ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் பழுதை சரி செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com