ரயில்வே துறையில் வேலை வழங்க கோரி... சென்ட்ரலில் இளைஞர்கள் திடீர் போராட்டம்

தென்னக ரயில்வேயில், ஐசிஎப்-ல் தொழில் பழகுனர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்கக்கோரி போராட்டம் நடத்தியவர்கள், வேலை வழங்காவிட்டால் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்வோம் என எச்சரித்துள்ளனர். கடந்த 2008 முதல் தற்போது வரை பயிற்சி பெற்றவர்களுக்கு பல்வேறு காரணங்களை கூறி வேலை வழங்க தென்னக ரயில்வே மறுப்பதாக கூறி 200-க்கும் மேற்பட்டோர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com