சமையலறையில் திடீர் மின்கசிவு - கொளுந்து விட்டு எரிந்த வீடு - தி.நகரில் பரபரப்பு | chennai

x

சென்னை, தி.நகர் போக் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மாம்பலம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சமையலறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படாத நிலையில் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்