சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - தீயாய் பரவும் வைரல் வீடியோ

x

பீகாரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கனரக வாகனத்தின் சக்கரம் சிக்கியது. பாட்னாவில் உள்ள அகம்குவான்-ஷீதாலா மாதா மந்திர் சாலை அருகே டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில், டிரக்கின் பின்சக்கரம் சிக்கிக்கொண்டது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மோசமான சாலை அமைக்கப்பட்டுள்ளதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள். பீகாரில் மோசமான கட்டுமானத்தால் அண்மையில் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்