திடீரென நடுவானில் ஏற்பட்ட கோளாறு - அவசரஅவசரமாக சென்னையில் இறங்கிய விமானம்

x

கத்தாரில் இருந்து இந்தோனேஷியா சென்ற விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தோஹாவில் இருந்து 356 பயணிகளுடன் ஜகார்த்தா சென்றபோது திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதனை சரிசெய்ய முடியாத நிலையில், கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. சுமார் 6 மணி நேரத்திற்குப் பின்னர் சென்னையில் இருந்து விமானம் ஜகார்த்தாவுக்கு புறப்பட்டுச் சென்றது.


Next Story

மேலும் செய்திகள்