மாரியம்மன் கோயிலுக்கு திடீர் பூட்டு - அதிர்ச்சியில் உறைந்து நின்ற பக்தர்கள்

x

காஞ்சிபுரத்தில் உள்ள தும்பவனத்து மாரியம்மன் கோயிலுக்கு திடீர் மேல் பூட்டு போடப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அண்மையில் அறநிலையத் துறையின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட அந்த கோயிலுக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் சார்பில், கோயில் அருகே நன்றி அறிவிப்பு பேனரும் வைக்கப்பட்டிருந்தது.

கோயில் பூசாரி அளித்த தகவலின் பேரில் 4 மணி நேரத்துக்குப் பிறகு வந்த போலீசார், கோயிலின் மேல்பூட்டை உடைத்து பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதித்ததனர்.

ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களே அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள சூழலில், கோவிலுக்கு மேல் பூட்டு போட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும் கிராம மக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்