எல்லையில் திடீரென துப்பாக்கிச் சூடு...7 மாவட்டங்களுக்கு இணைய சேவை முடக்கம் - தொடரும் பதற்றம்

x

அசாம் - மேகாலயா இடையே மேற்கு ஜைந்தியா மலைப்பகுதியில் உள்ள முக்ரோ என்ற இடத்தில், திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில், அசாம் மாநில வன அதிகாரி உள்பட ஆறு பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மேகாலயாவின் ஏழு மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக, இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவுவதாக, மேகாலயா முதலமைச்சர் கன்ராட் சங்கா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்