செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - அலறியடித்து ஓடிய நோயாளிகள் - கரும் புகையால் மூச்சு திணறல் ஏற்றப்பட்டது

x

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - அலறியடித்து ஓடிய நோயாளிகள் - கரும் புகையால் மூச்சு திணறல் ஏற்றப்பட்டது

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்ரே வார்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வழக்கமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், எக்ஸ்ரே வார்டில் திடீரென தீ பற்றி எரிந்தது. தீ மளமளவென அறை முழுவதும் பரவி பற்றி எரிந்ததால் கரும்புகை சூழ்ந்தது. எக்ஸ்ரே வார்டில் இருந்த ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வீரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பெரும் சேதம் ஏற்படுவதற்கும் தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தால் வார்டு முழுவதும் கரும்புகை பரவி மூச்சு திணறல் ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையில், இன்வெர்ட்டர் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள


Next Story

மேலும் செய்திகள்