ஏசி ரயில் பெட்டியில் திடீர் தீ விபத்து - அலறியடித்து ஓடிய பயணிகள்

பீகாரில் ஆவாத் அசாம் விரைவு ரயிலின் ஏசி பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். முசாஃபர்பூர் அருகே ரம்தயாலு ரயில்நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது, ஏசி பெட்டியில் தீ பற்றி புகை சூழ்ந்த‌து. இதையடுத்து, தீ அலாரம் அடித்த‌தால் அவசர அவசரமாக ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியே குதித்து ஓடினர். நல்வாய்ப்பாக உடனடியாக தீ அணைக்குப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com