துர்கா பூஜை கொண்டாட்டத்தில் திடீர் தீ விபத்து! - 3பேர் உயிரிழப்பு

x

படோஹியில் துர்கா பூஜையையொட்டி, மூங்கில், துணிகளால் ஆன பந்தல் அமைக்கப்பட்டு, ஆரத்தி விழா நடத்தப்பட்டது. அதில் சிறுவர்கள் பெண்கள் என150க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், பந்தலின் ஓரத்தில் திடீரென தீ பிடித்து எரிந்த‌து. தீ மளமளவென பரவி பந்தல் முழுவதும் பரவியது. இதில், 52 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் தீ விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்