கடற்கரை சுத்தம் செய்த மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்.. என்ன காரணம்? - கலெக்டர் விளக்கம்

x

கன்னியாகுமரியில், என்.எஸ்.எஸ் முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரியில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் 150 என்.எஸ்.எஸ் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

காலை உணவு சாப்பிட்ட பின்னர், இவர்களில் 43 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 30 மாணவ, மாணவிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் 13 மாணவ, மாணவிகள் உள்நோயாளிகளாக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலறிந்து, மாநகர மேயர் மகேஷ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உள்ளிட்டோர் மாணவர்களை நேரில் சென்று சந்தித்தனர்.

மாணவர்களின் உடல்நலக்குறைவுக்கான முழுமையான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்