திடீரென வெடித்த கார் டயர்... மாநகர பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்து

x

சென்னனை கத்திப்பாராவில் மாநகர பேருந்தும், காரும் மோதி விபத்துக்குள்ளானதால், அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கண்டிகை மேலகோட்டையூர் பகுதியை சேர்ந்த டேனியல், தனது குடும்பத்தினருடன் காரில் சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தார். திடீரென கார் டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து, வண்டலூரில் இருந்து பாரிமுனை நோக்கி சென்ற பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரை அப்புறப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்