போக்குவரத்து கழகத்தின் திடீர் முடிவு - ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு...

x

சென்னையில் ஆயிரம் பேருந்துகளை தனியார் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்ப்பு தெரிவித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அரசு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வி.தயானந்தம் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு நேற்று சென்னையில் ஆயிரம் பேருந்துகளை தனியார் இயக்க அனுமதிக்கும் நடவடிக்கையில் முதற்கட்டமாக 500 வழித்தடங்களில் தனியார் மூலம் பேருந்துகள் இயக்க ஒப்பந்தம் கோரியுள்ளது. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டதிருத்தம் திமுக ஆட்சியில் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வி.தயானந்தம், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை அதிகாலை மாநகர போக்குவரத்து கழகத்தில் அனைத்து பணிமனைகளிலும் முதற்கட்ட ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், பின்னர் அனைத்து சங்கங்களையும் திரட்டி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்