வேலூரில் சட்டென மாறிய வானிலை

குடியாத்தம் அருகே கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் காயமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சுமார் ஒரு மணி நேரம் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பேர்ணாம்பட்டு தெருக்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே அப்பகுதில் மாடி வீட்டின் சுவர் இடிந்து, பக்கத்து வீட்டின் தகர மேற்கூரை மீது விழுந்தது. இதில் காயமடைந்த 2 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சூறைக்காற்றுடன் பெய்த மழையினால், பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com