ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத்தில் திடீர் மற்றம் | Army officers | pensioners

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு புத்தாண்டு பரிசாக one rank one pension திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகையை மாற்றி அமைத்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசின் முடிவின் மூலம் சுமார் 25.13 லட்சம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினர் பயன்பெற உள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 8 ஆயிரத்து 450 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் 2019 முதல் பின் தேதியிட்டு வழங்கப்பட இருப்பதால் இதற்கான நிலுவைத் தொகையை வழங்க அரசுக்கு கூடுதலாக 23 ஆயிரத்து 638 கோடி கூடுதல் செலவாகும். இந்த ஓய்வூதிய உயர்வு 2019 ஜூலை ஒன்றாம் தேதி, பின் தேதியிட்டு நடைமுறைக்கு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com