குடியரசுத் தலைவர் செல்லும் சாலையில் திடீர் விபத்து - பெரும் பரபரப்பு | Droupadi Murmu

x

மதுரையில் குடியரசுத் தலைவர் செல்லும் சாலையில் திடீர் விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அவனியாபுரம், வில்லாபுரம், தெற்கு வாசல் வழியாக மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றார். அவனியாபுரத்தில் இருந்து ஜனாதிபதி செல்லும் பாதையில் போக்குவரத்து மாற்றப்பட்டு வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வந்தன. அவ்வாறு திரும்ப முயன்ற கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் நிகழாத நிலையில், குடியரசுத் தலைவர் சென்ற பிறகு விபத்திற்குள்ளான கார் அப்புறப்படுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்