FIRST NIGHT-ல் திடீர் வயிற்று வலி..மறுநாளே பிறந்த பெண் குழந்தை - அதிர்ந்து போன மாப்பிள்ளை வீட்டார்
வயிற்று வலியால் துடித்த மணப்பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் மணமகன் வீட்டாரை தூக்கிவாரிப்போட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த பெண் ஒருவரை, நொய்டாவை சேர்ந்தவர் திருமணம் செய்துள்ளார். பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது பெண்ணின் வயிறு பெரிதாக இருந்தது குறித்து மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர்.
அப்போது மணமகளுக்கு கல் அடைப்புக்கான அறுவை சிகிச்சை நடந்ததாகவும், அதன் பின்னர் வயிறு பெரிதாக தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மற்றபடி எந்த பிரச்சினையும் மருத்துவரீதியாக இல்லை என்றதும் இருவரது திருமணமும் கடந்த 26 ஆம் தேதி நடந்துள்ளது.
திருமணம் ஆன மறுநாளே மணமகள் தனக்கு தாங்க முடியாத வயிறு வலி இருப்பதாக சொல்லியிருக்கிறார். உடனடியாக மணமகன் வீட்டார் சாதாரண வலியாகதான் இருக்கும், பயப்பட வேண்டாம் என தைரியம் சொல்லியிருக்கிறார்கள். மணமகள் தாங்க முடியாத வலியில் துடிக்க அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மணமகளை பரிசோதனை செய்த மருத்துவர் சொன்ன தகவல் மணமகன் வீட்டாரை தூக்கி வாரிப்போட்டுள்ளது.
அதாவது மணமகள் 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என மருத்துவர் தெரிவித்துள்ளார். திருமணம் ஆன மறுநாளே கர்ப்பமா...? என மாப்பிள்ளை கவலையடைய, மணமகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார், மணமகள் வீட்டாருக்கு போன் போட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அப்போது போலீஸ் நிலையம் செல்ல வேண்டாம் என இருதரப்பும் முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது.
தங்கள் வீட்டில் இருக்கக்கூடாது என மணமகனின் அப்பா சொல்ல, தங்கள் மகளை அழைத்துச் செல்வதாக மணமகள் வீட்டார் தெரிவித்துள்ளனர். திருமணம் ஆன மறுநாளே மணப்பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவம் மணமகன் வீட்டாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
