அடுத்தடுத்து ரெய்டுகள்.. வெகுண்டெழுந்த அமைச்சர் உதயநிதி

திருப்பத்தூரை அடுத்த ஆதியூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய அவர், மத்திய பாஜக அரசு அதிமுகவை கைக்குள் வைத்துள்ளது போன்று, திமுகவையும் கைக்குள் வைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். ஆனால், அது ஒருபோதும் நடக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி அச்சுறுத்தப் பார்ப்பதாக கூறிய அமைச்சர் உதயநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களூரு சென்றதே, பாஜகவை தூக்கி எறியத்தான் என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com